யாழ். சர்வதேச துடுப்பாட்ட மைதானப் பணிகள் ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆரம்பம் – ஓராண்டுக்குள் மைதானம் நிர்மாணிக்கப்படும் – கள ஆய்வின் பின் அமைச்சர் சுனில் குமாரகமகே அறிவிப்பு!

Sunday, November 8th, 2026


……
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மண்டைதீவு சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகமகே தெரிவித்துள்ளார்.

குறித்த மைதானத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு இன்றையதினம் (8.11.2026)நேரில் விஜயம் செய்த அமைச்சர், திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

இதன்போது, சுற்றுச்சூழல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட சுமார் 10 அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிகள் அனைத்தும் தற்போது கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் குறித்த மைதானம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இது சாதாரணமான விளையாட்டு மைதானமாக அன்றி சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, மைதானத்தின் நிலமட்டத்தை உயர்த்தி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தெல்லிப்பளைப் பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 21 அடி உயரத்தில் அமைந்துள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் மைதானத்தின் நிலமும் உயர்த்தப்படவுள்ளது.

தற்போதைய நிலமட்டத்திலிருந்து மேலும் மூன்று முதல் நான்கு அடி வரை மண் நிரப்பி, உரிய முறையில் நிலத்தைச் செப்பனிட்ட பின்னரே அடுத்தகட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் –  எவ்வித தாமதங்களுமின்றி பணிகளை முன்னெடுத்து, இன்னும் ஓராண்டுக்குள் மைதானத்தை முழுமையாக நிறைவு செய்வதே இலக்காக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு இடர்பாடுகளால் கட்டுமாணப் பணிகள் தடைப்பட்டு போன நிலையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதான  கட்டுமாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தமயானது வடக்கு மாகாண இளைஞர்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும், சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளுக்கும் புதிய பாதை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106