அரக்கனின் அழிவை வலி வடக்கு மக்கள் கறுப்பு தினமாக கருதுகின்ற நிலை துரதிஸ்வசமானது – ஈ.பி.டி.பி. ஆதங்கம்!

Sunday, November 8th, 2026


……………..
நரகாசூரன் அழிக்கப்பட்ட நாளை கறுப்பு தினமாக கருதி வலி வடக்கு மக்கள் வீதியில் போராடிக்கொண்டு இருப்பது துரதிஸ்டவசமானது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கில் பலாலி பிரதேச மக்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காணி விடுவிப்பு போராட்டத்தின் 21 ஆவது வாரம், தீபாவளி தினமான இன்று கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னெடுக்;கப்பட்டிருந்து. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நரகாசூரன் என்ற அரக்கன் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகை உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலி வடக்கு மக்கள் கறுப்பு தீபாவளியாக இன்றைய நாளிலும் கொட்டும் மழைக்கு மத்தியில் வீதியில் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதேவேளை, தன்னுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த ஒரு அம்மையார், தன்னுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற அங்கலாய்ப்புடன் உயிரிழந்து இன்றைய தினம் அவரின் இறுதி யாத்திரை இடம்பெற்றுள்ளது.
இந்த மக்களின் நியாயமான போராட்டத்தினை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்ற காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுருகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கின்ற போதிலும், எந்தவகையான காத்திரமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட்டாத தெரியவில்லை.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், இராணுவத்தினரால் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலா விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவ வைத்தியசாலை ஒன்று வேகவேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.
இந்த நியாயமான போராட்டம் நியாயமான முறையில் இந்த அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்பட வேண்டும். இன்றைய தீபாவளி தினத்தினை கறுப்பு தீபாவளியாக கருதி போராடிக் கொண்டிருக்கின்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்த தீபாவளியையேனும் இந்த மக்கள் தங்களின் சொந்தக் காணிகளில் கொண்டாடுகின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.’ என்று தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106