சமத்துவ உரிமையும் சமூக நீதியும் நிலவும் நிரந்தர ஒளி பிறக்கட்டும்! –  தீபாவளி வாழ்த்தில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 7th, 2026


….

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி பிறக்க வேண்டும் என்றும், இன, மத, சமூக பேதங்கள் நீங்கி சமத்துவ உரிமையும் சமூக நீதியும் நிலவும் இலங்கை உருவாக வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

இலங்கையர்கள் என்ற ஒன்றுபட்ட சமத்துவ உணர்வும், தமிழ் பேசும் மக்கள் என்ற தனித்துவ அடையாளமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சகல மக்களுக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதுடன், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, பொருளாதாரத்தில் தன்னிறைவும் தலைநிமிர்வும் ஏற்பட வேண்டும்.
இவையே மக்களின் உண்மையான மகிழ்ச்சியாகும்.

வலிகளையும் வேதனைகளையும் தந்த வரலாறுகளை எம்மால் மறக்க முடியாது. எனினும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக மாற்றி, அவற்றைக் கொதிநிலையில் வைத்துக்கொண்டு கூக்குரல் எழுப்பும் குறுகிய அரசியல் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

மக்கள் வழங்கும் ஆணைக்கு மதிப்பளித்து, தேசிய நல்லிணக்கத்தின் வழியாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அனைவரும் பயணிக்க வேண்டும்.

சரியான திசைவழியில் நாட்டையும் மக்களையும் வழிநடத்தும் வல்லமைகளையே சகல மக்களும் தெரிவுசெய்ய வேண்டும்.

நல்லதே நடக்கும்; நம்பிக்கை வெல்லும். தீயவை யாவும் தீர்ந்து போகட்டும். எங்கும் அறம் நிலைபெறட்டும்.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் சகல மக்களுக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106