கட்சியின் செயற்பாட்டாளர்கள் குறித்தஉட்சுற்று அறிக்கை!
Saturday, November 7th, 2026
……
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(07.11.2026) நடைபெற்ற யாழ். மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
குறித்த தீர்மானங்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் – தங்களுடைய கட்சி சார்ந்த செயற்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
அவையாவன,
1. கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஏற்படுகின்ற உள்முரண்பாடுகள், சரியான முறையில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். உள்தளங்களில் தீர்வு காணமுடியாத பட்சத்திலேயே வெளித் தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
2. கட்சியில் பொறுப்புக்களை வகிப்போர், தமது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். அழைக்கப்படுகின்ற கூட்டங்களுக்கு நியாயமான காரணம் இன்றி மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காவிடின், குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
3. பிரச்சார பணிகளில் செயற்பாட்டாளர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும். இதனை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுப்பதுடன், முடிந்தளவு மக்களுடன் நேரடி தொடர்புகளையும் தொய்வின்றி பேண வேண்டும்.
4. இந்த வருடம் நிறைவடைவதற்குள் கட்சி சார்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் புதியவர்களை நியமிக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும்.
5. கட்சி தீர்மானங்களை, யாழ் மாவட்டம் எங்கும் செயற்படுத்துவதற்கும், கட்சி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், யாழ். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு, பிரதேச அமைப்பாளர்களும் செயற்பாட்டாளர்களும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இத்தீர்மானங்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவததையும் மக்கள் நலத் திட்டங்களை வீரியமாக முன்னெடுப்பதையும் நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில். இவற்றை அனைத்து தோழர்களும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
நன்றி.
தோழர் கீபி(பசுபதி சீவரத்தினம்)
தேசிய அமைப்பாளர்,
ஈ.பி.டி.பி.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106