தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய யாழ் நகர் – மக்கள் பெருந்திரளாகக் குவிவு – வீதிப் போக்குவரத்தும் வாகனத் தரிப்பிடமும் பெரும் சர்ச்சை!
Saturday, November 7th, 2026
……….
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாண நகரம் மக்கள் வெள்ளத்தால் களைகட்டியுள்ளதுடன், ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை வியாபாரப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகள் பெரும் மும்முரமடைந்துள்ளன.
குறிப்பாக, யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள புல்லுக்குளம் வீதி மற்றும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தைச் சூழவுள்ள பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் புடவை மற்றும் ஆடை விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிகள் தொடரும் நிலையிலும், தீபாவளிப் பண்டிகைக்கான கொள்வனவுகளை மேற்கொள்வதற்காக குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் குடும்பம் குடும்பமாக யாழ் நகரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இதனால் நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகள் சனநெரிசலால் நிரம்பி வழிகின்றன.
எனினும், இந்த வியாபாரக் களைகட்டலுக்கு மத்தியில் பொதுமக்கள் பல்வேறு அதிருப்திகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, புடவைக் கடைகள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில் பொருட்களின் விலைகள் அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மக்கள், வாகனத் தரிப்பிட முகாமைத்துவம் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
முறையான ஒழுங்குபடுத்தலின்றி, வாகனங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் எதுவுமின்றி, வாகனத் தரிப்பிட நடவடிக்கை தனிநபர் ஒருவரின் வருமான ஈட்டும் நடவடிக்கையாகச் செயற்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு யாழ் மாநகரசபை உரிய தலையீட்டை மேற்கொண்டு முறையான ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மறுபுறம், முனியப்பர் ஆலயப் பகுதி, யாழ் கலாசார மத்திய நிலையம் மற்றும் வீரசிங்கம் மண்டபத்தைச் சூழவுள்ள வீதிகளின் இருமருங்கிலும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி பொதுப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் நகருக்குள் பயணிக்கும் பொதுமக்கள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், வீதிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் பொலிஸாருக்கும் மேலதிக சவால்கள் உருவாகியுள்ளன.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் மக்களின் வருகையும் வியாபார நடவடிக்கைகளும் அதிகரிப்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதனைச் சீராக முகாமைத்துவம் செய்வதற்கான முன்திட்டமிடல்கள் இல்லாமை நகரின் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் அதிருப்தியையும் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, வாகனத் தரிப்பிடங்களுக்கான முறையான ஒழுங்குபடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீதியோர வாகன நிறுத்தங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நடைபாதை வியாபாரங்களைச் சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகளை யாழ் மாநகரசபை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக யாழ்.மாநகரசபை தனது வருமானத்தை ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி மற்றும் பொதுநலன் ஆகியவற்றுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
000



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106