மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Wednesday, November 4th, 2026
……
சாவகச்சேரி பிரதேசத்தின் நலன்களையும், மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள சாவகச்சேரி நகர சபையின் அமர்வை முன்னிட்டு, அதற்கான முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று கட்சியின் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது, நகர சபையின் எதிர்வரும் அமர்வில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, சாவகச்சேரி பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதனை டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ். மாவட்ட மேலதிக அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச அமைப்பாளர் மெடிஸ்கோ, மேலதிக அமைப்பாளர் தர்சன், ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106