நாட்டின் பல பகுதிகளில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
Wednesday, November 4th, 2026
அண்மைய நாள்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் நீரரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கலாம் என சுகாதார அதிகாரிகள் (03) தெரிவித்தனர்.
இதனால், டெங்கு காய்ச்சல்,தொற்று மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற பல்வேறு கிருமிகளின் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். அதில் முக்கியமாக லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் தோல்நோயால் பாதிக்கப்படக்கூடும்.
லெப்டோஸ்பைரோசிஸ் சில சமயங்களில் எலி காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தொற்று மழை பெய்து தேங்கும் வெள்ள நீரில் கசிந்து பரவும் எலி, நாய், பன்றி போன்ற விலங்குகளின் சிறுநீரில் உள்ள ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
ஒருவர் தண்ணீரில் நடக்க நேரிட்டாலோ அல்லது அதிக நேரம் செலவழித்தாலோ, இது திறந்த காயம் அல்லது கீறல் வழியாக மனித உடலுக்குள் பரவுகிறது.
கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை மற்ற வழிகளாகவும் இருக்கலாம்.
இந்த தொற்றுக்கு உடனடி சிகிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.
எலி காய்ச்சலின் அறிகுறிகள் –
1. அதிக காய்ச்சல்
2. தலைவலி
3. தசை அல்லது மூட்டுகளில் வலி
4. வாந்தி, குமட்டல்
5. குளிர் நடுக்கம்
6. வயிற்றுப்போக்கு
7. சிவந்த அல்லது எரிச்சலூட்டும் கண்கள்
லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று ஏற்பட்டால், அதன் அறிகுறிகளானது டெங்கு, ப்ளூ போன்றவற்றை போன்றே இருக்கும். அதுவும் ஆரம்பத்தில் சளி, காய்ச்சலாக இருப்பதால், பலரும் மருத்துவரிடம் செல்வதற்கு பதிலாக, தாங்களாகவே மருந்துகளை எடுத்து கொள்வார்கள்.
ஆனால் இது சாதாரண சளி, காய்ச்சலாக இருந்தால் ஓரிரு நாட்களில் சரியாகும். அதுவே எலி காய்ச்சலாக இருந்தால், அறிகுறிகளானது மேலும் தீவிரமாகும்.
எனவே எலி காய்ச்சலுக்கான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
எலி காய்ச்சலுக்கு மருத்துவர்கள் அதன் அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை தொடங்குவார்.
அதில் பொதுவாக ஆன்டி-பயாடிக் உடன், பிற வகை சிகிச்சைகளும் அடங்கும். இப்படி வழங்கும் ஆன்டி-பயாடிக்கை மருத்துவர் பரிந்துரைத்த படி முழுமையாக எடுக்க வேண்டும்.
ஒருவேளை கடுமையான பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனையில் அனுமதிப்பதும், நரம்பு வழி நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுப்பதும் தேவைப்படலாம்.
இதே நேரம்
எலி காய்ச்சலுக்கு போதுமான சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் நிலைமை தீவிரமாகி,
கடுமையாக சிறுநீரக செயலிழப்பு,
கல்லீரல் செயலிழப்பு, நுரையீரல் இரத்தப்போக்கு, இரத்த உறைவு, த்ரோம்போசைட்டோபீனியா, குறைவான இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
மறுபுறம் எலி காய்ச்சலை தடுக்க வெள்ள நீர் அல்லது சேற்றில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை வெள்ள நீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு காலணிகளை அணிய வேண்டும்
கால்களில் காயங்கள் இருந்தால், அசுத்தமான நீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
வெளியே சென்று மாசுபட்ட நீருடன் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வந்ததும் சுத்தமான நீரால் சவட்காரம் பயன்படுத்தி நன்கு குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
மொத்தத்தில் லெப்டோஸ்பைரோசிஸ் குணப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது என்பதால், மழைக்காலத்தில் காய்ச்சல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், சுயமாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்க முடியும்.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106