வவுனியாவில் இளைஞன் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை – விசாரணைகளை முன்னெடுக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, November 3rd, 2026

……
வவுனியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் போதைப்பொருள் எதனையும் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (02.11.2026) இளைஞர் ஒருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

மருத்துவ அறிக்கை உள்ளிட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த இளைஞரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தி. திருவருள் தலைமையில் சட்டத்தரணிகளான திபின்சன் மற்றும் ஜெனனி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.


00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106