கோலாகலமாக நடைபெற்ற நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா!
Tuesday, November 3rd, 2026
…..
நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா (03.11.2026) செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபரும், செந்தமிழ்ச் சொல்லருவியுமான சந்திரமௌலீசன் லலீசன் கலந்து சிறப்பித்தார்.
விழாவிற்கு வருகைதந்த விருந்தினர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரி மாணவிகளின் மேற்கத்திய இசைக்குழுவினரின் வாத்திய இசை முழங்க, விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மங்கல நிகழ்வுகளுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது மாணவிகளின் கல்விசார் அடைவுகள், கலைத்திறன்கள் மற்றும் ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் வெளிப்படுத்திய திறமைகள், சாதனைகள் என்பன பாராட்டப்பட்டு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
மாணவிகளின் ஆளுமை விருத்தி, திறமைகளை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால அடைவுகளுக்கு உற்சாகமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106