நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி!
Tuesday, November 3rd, 2026
……
2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவு 2,171.4 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 3,483.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 60.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதுவே 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 2026 செப்டெம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, 2025 செப்டெம்பர் மாதத்தில் 440.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2026 செப்டெம்பர் மாதத்தில் 415.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106