அஸ்வெசும 2026 –  மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனை விண்ணப்பிப்பது தொடர்பில் அறிவுறுத்து!…..

Tuesday, November 3rd, 2026

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் தொடர்பாக மேல்முறையீடு  அல்லது ஆட்சேபனை சமர்ப்பிக்க விரும்புவோருக்கான 2026ஆம் ஆண்டுக்கான இணையவழி விண்ணப்ப நடைமுறை தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்ணப்பத்தை இணையத்தின் ஊடாகச் சமர்ப்பிப்பதற்கான படிமுறைகள் வருமாறு –

முதலில் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://wbb.gov.lk என்பதற்குச் செல்லவும்.

தேவையான மொழியைத் தெரிவுசெய்யவும்.

பதிவுசெய்யப்பட்ட குடிமகனாக உள்நுழையும் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

கோரப்படும் QR குறியீட்டை உள்ளிடவும்.

கைப்பேசிக்கு அனுப்பப்படும் OTP குறியீட்டைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தலை மேற்கொள்ளவும்.

மேல்முறையீடு அல்லது ஆட்சேபனை தொடர்பான விபரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பத்தை இறுதியாகச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்து விபரங்களையும் கவனமாகச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம்: https://wbb.gov.lk

மேலதிக தகவல்களுக்கு  1924

அஸ்வெசும நலன்புரி உதவிக்காக மேல்முறையீடு செய்ய விரும்புவோர் இந்தத் தகவலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையுள்ள குடும்பங்களுக்கும் பயனாளிகளுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106