அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி!
Tuesday, November 3rd, 2026
….
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி ஒக்டோபர் மாதத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 332.61 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில் 330.83 ரூபாயாகவும், 2025ஆம் ஆண்டு இறுதியில் 309.99 ரூபாயாகவும் ரூபாயின் பெறுமதி காணப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 6.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில் இந்த வீழ்ச்சி 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற வசதியையும் உள்ளடக்கிய இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, 2026 செப்டம்பர் மாத இறுதியில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இந்தக் கையிருப்பானது நாட்டின் 3.3 மாதங்களுக்கான இறக்குமதிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாகும்.
மேலும், செப்டம்பர் மாதத்தில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குச் சந்தை ஆகிய இரண்டிலிருந்தும் வெளிநாட்டு முதலீடுகள் நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்துள்ளன.
இதன்படி, அரச பிணையங்கள் சந்தையிலிருந்து 39.9 மில்லியன் அமெரிக்க டொலரும், கொழும்புப் பங்குச் சந்தையின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைப் பரிவர்த்தனைகளிலிருந்து 4.7 மில்லியன் அமெரிக்க டொலரும் நிகரமாக வெளியேறியுள்ளன.
எனினும், 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் 168 மில்லியன் அமெரிக்க டொலர் நிகர வெளிநாட்டு முதலீடு கிடைத்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 178 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
அதேவேளை, கொழும்புப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிய வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி, 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 85 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 170 மில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்படைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106