அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மாவின் 31ஆம் நாள் நினைவேந்தலில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Monday, November 2nd, 2026
……..
அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மாவின் 31ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 07.10.2026 அன்று வயது மூப்பின் காரணமாக காலமான அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மாவின் நினைவேந்தல் நிகழ்வு ஊர்காவற்றுதையில் உள்ள அமரரது இல்லத்தில் இன்று (02.11.2026) நடைபெற்றது.
குறித்த நினைவு கூரல் நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன் ஆகியோருடன் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச அமைப்பாளர் மருதயினார் ஜெயகாந்தன் மற்றும் வேலணை பிரதேச அமைப்பாளர் சின்னையா சிவராசா ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலித்திருந்தனர்.
முன்னதாக, அமரரது 31ஆம் நாள் நினைவேந்தல் மலரில் வெளியிடுவதற்காக செயலாளர் நாயகம் வழங்கிய நினைவுக் குறிப்பில், அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மா தம்பாட்டி கிராமத்தில் சமூக நலனிலும் மக்கள் சேவையிலும் அக்கறையுடன் வாழ்ந்தவர் என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலப் பணிகளுக்கு அவர் தொடர்ச்சியாக ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழங்கியதாகவும், அவரது புதல்வர் ஜெயகுமார் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையிலும் தாயகத்தின் அபிவிருத்திப் பணிகளில் தன்னை இணைத்துச் செயற்படுவதாகவும் அவர் தனது நினைவுக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சக மனிதர்களை நேசித்து, தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசித்துச் சேவையாற்றிய அமரர் சின்னத்தம்பி வாட்லீன் அம்மாவின் சமூகப் பங்களிப்பை நினைவு கூர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106