இன்றுமுதல் கட்டாயமாகும் TIN இலக்கம் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
Sunday, November 1st, 2026
…..
குறிப்பிட்ட சில சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைச் சமர்ப்பிப்பது இன்று (நவம்பர் 01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறத்தல், கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவைகளை வழங்குவதற்கு முன்னர், சமர்ப்பிக்கப்படும் TIN இலக்கம் செல்லுபடியாகுமா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ e-Services இணையவழிச் சேவையின் ஊடாகப் பதிவு செய்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், ஏற்கனவே பெற்றுள்ள TIN இலக்கம் செல்லுபடியாகுமா என்பதையும் அதே இணையவழிச் சேவை மூலம் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
சரிபார்ப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதியை, குறிப்பிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாகச் சமர்ப்பிக்க முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106