முதல் சர்வதேச வானூர்தி சேவையைத் தொடங்கிய கிரீன்லாந்து!

Sunday, November 1st, 2026

டென்மார்க்கிடம் இருந்து எதிர்காலத்தில் சுதந்திரம் பெறும் நோக்கில் செயல்பட்டு வரும் கிரீன்லாந்து, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு புதிய சர்வதேச வானூர்தி நிலையம் ஒன்றை திறந்துள்ளதை தொடர்ந்து, தனது முதல் சர்வதேச வானூர்தி சேவையைத் தொடங்கியுள்ளது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரத்தில் இருந்து கிரீன்லாந்தின் இலுலிசாட் (Ilulissat) நகருக்கு முதல் சர்வதேச வானூர்தி சேவை வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.

தற்போது மீன்பிடித்தல் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் கிரீன்லாந்து, நாட்டின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தி வலுப்படுத்தும் நோக்கிலும், சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் முயற்சியாகவும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், தனது பொருளாதாரத்தை சுயமாக பலப்படுத்தும் நோக்கில் கிரீன்லாந்து அரசாங்கம் இத்தகைய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ‘அசோசியேட்டட் பிரஸ்’  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106