முத்தரப்பு தொடர் – இலங்கையை வென்றது பாகிஸ்தான்!

Sunday, November 1st, 2026

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்து 131 ஓட்டங்களைக் குவித்தார்.

பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானியப் பந்துவீச்சாளர்களில் ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சல்மான் ஆகா மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஃபகர் சமான் 99 பந்துகளில் 127 ஓட்டங்களும் சாத் பைக் 75 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இதேவேளை , அரஃபாத் மின்ஹாஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 31 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றார்.

இலங்னை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் அசித பெர்னான்டோ 2 விக்கெட்டுகளையும் பெற்றனர்

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிய நிலையில் , இலங்கை அணி இந்த ஒருநாள் முத்தரப்புத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106