பரிதவித்து நின்ற மக்களுக்கு கரம் கொடுத்தது ஈ.பி.டி.பி. – ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம்!
Friday, October 30th, 2026
…….
மக்களை சரியாக வழிப்படுத்தி இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதாக நினைவு நிகழ்வுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்குதமிழ் மக்களும் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த கால நிகழ்வுகளையும் அவலங்களையும் படிப்பினையாக கொண்டு எதிர்கால தீர்மானங்கள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழில் நடைபெற்ற முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதன் 36 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –
“நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுடைய பூர்வீக தேசத்தின் வரலாற்றை புரட்டிப் பார்ப்போமேயானால், அங்கே பல இரத்தம் தோய்ந்த பக்கங்கள் கறுப்புப் பக்கங்களை எல்லாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அவ்வாறான ஒரு கறுப்பு பக்கத்தின் நினைவுகளை மீட்பதற்காக இங்கே நாங்கள் ஒன்றுகூடி இருக்கின்றோம்.
ஒரு இனம் தாங்களுடைய வரலாறுகளை வரலாற்று ரீதியாக தாங்கள் சந்தித்த அவலங்களை சாதனைகளை எல்லாம் தங்களுடைய எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதன் மூலமாகவே ஒரு வளமான வலுவான எதிர்காலத்தினை உருவாக்க முடியும்.
அந்த அடிப்டையிலேயே இன்றைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மன்னாரில் வேப்பங்குளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநியாயத்தின் உச்சமாக ஒக்டோபர் 30 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் இருந்து அனைத்து முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டார்கள்.
ஒரு தமிழனாக ஒருவகையான குற்றவுணர்வுடன்தான் நான் இந்த நிகழ்விலே கலந்து கொண்டிருக்கின்றேன்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டமைக்கு தமிழ் மக்கள் காரணம் அல்ல.
ஆனால் தமிழ் மக்களாகிய நாமும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்பதை பொறுப்புணர்வுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தமிழ் மக்களின் பெயரினால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று, தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தரப் போவதாக கூறிக் கொண்ட அமைப்பு ஒன்றின் தலைமை பாசிச சிந்தனையோடு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து புத்திஜீவிகளை அழித்த போது, தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரெலோ தோழர்களை ரயர் போட்டு கொழுத்தியபோது, தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களை வீடு வீடாக புகுந்து சுட்டுத்தள்ளிய போது தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள். எதற்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை.
அதேபோன்று முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போதும் தமிழ் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.
ஆனால், அந்த வலி எத்தகையது என்பதை காலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தியது. ஒரு இரவிலே கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு எங்கே செல்கின்றோம் என்று தெரியால் தார் வீதியிலே இரவோடு இரவாக நடந்து செல்கின்ற வலி எத்தகையது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்.
இதுவொரு பட்டறிவு இவ்வாறான பட்டறிவுகள் இருந்தும் நாங்கள் சரியான முறையில் அதனை புரிந்து கொள்ளவில்லை.
அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டோம்.
எங்களுடைய தலைவர்கள் எப்படியானவர்களகாக இருக்க வேண்டும் என்ற புரிதல் இன்றி, மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை நம்பி 3 பேருக்கு வாக்களித்து இருக்கின்றோம்.
எங்களின் பிரச்சினைகளை உரக்க கதைப்பார் என்று நாம் தெரிவு செய்த ஒருவர், உன்னுடைய பிள்ளை உனக்கு பிறந்ததா பக்கத்து வீட்டானுக்கு பிறந்ததாக என்று எம்மை கேள்வி கேட்கின்ற தறுதலையை மக்கள் பிரதினிதி என்று தெரிவு செய்து வைத்திருக்கின்றோம்.
ஐயா, குப்பைகளை எங்களின் பிரதேசத்தில் கொட்டாதீர்கள் எங்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது என்று சொன்னால், உங்களின் பகுதியில் குப்பைகளை கொட்டாமல் லண்டனில் கொண்டு போயா கொட்டுவது என்று கேட்கின்ற புத்திசாலிகளைத் தான் எங்களின் பிரநிதிநிதிகளாக தெரிவு செய்து வைத்திருக்கின்றோம்.
இவ்வாறு பட்டறிவுகள் மூலம் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளாத தமிழ் மக்களில் ஒருவனாக குற்றவுணர்வோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற போதிலும், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் பாசறையில் அவரின் வழித்தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றவன் என்ற அடிப்படையில் பெருமையோடு இந்த நிகழ்விலே கலந்து கொண்டிருக்கின்றேன்.
இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் திக்குத் தெரியாமல் புத்தளத்தில் நின்ற போது, அங்கு தன்னுடைய மக்கள் நலச் செயற்பாடுகளை ஆரம்பித்தது ஈ.பி.டி.பி. வெறுங் கையோடு வந்த மக்களை ஆற்றுப்படுத்தி அவர்களுக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றி, அடிப்படை தேவைகளை பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி தேவாபாத் போன்ற குடியேற்றங்களை உருவாக்கி உங்களுக்கான வாழ்விடங்களை அமைத்துக் கொடுத்த திருப்தி எமக்கு இன்றும் இருக்கின்றது.
முஸ்லிம் மக்களின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காகவே தில்லையடிப் பகுதியில் ஒரு காரியாலம் அமைக்கப்பட்டது.
அங்கு முழுமையாக தங்கி இருந்து முஸ்லிம் மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வந்தவர் எங்களுடைய மூத்த தோழர் பவான். தங்களினால் விரட்டப்பட்டவர்களை தாங்கிப் பிடிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் நடுத் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின்னர் 2009 இற்கு பின்னரும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்பட்ட காலங்களில் அமைச்சு அதிகாரங்களை பயன்படுத்தியும், மாநகர சபை ஊடாகவும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம்.
தற்போதும் ஒரு மாநகரசபை உறுப்புரிமை ஒன்றை உங்களில் ஒருவருக்கு வழங்கி முஸ்லிம் மகளின் தேவைகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. ஐ பொறுத்தவரையில், எங்களை புரிந்துகொள்ளவில்லை, எங்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களின் நன்மைகளை அனுபவித்தளவிற்கு எங்களின் கரங்களை வலுப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் இருப்பதை போன்றே முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் இருக்கின்றது.
எனவே இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்துக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் சரியானவர்களை அடையாளம் காட்டும் வகையிலும் அமையவேண்டும். மாறாக, இனங்களுக்கு இடையில் இடைவெளியை உருவாக்க கூடாது ‘ என்று தெரிவித்தார்.




|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106