இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றி காய்ச்சல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
Friday, October 30th, 2026
…..
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆபிரிக்க பன்றி காய்ச்சல் மீண்டும் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இந்த வைரஸ் தொற்றிய பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-
“கடந்த ஆண்டில் இந்நோயைக் பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்த போதிலும், இந்த ஆண்டில் மீண்டும் சில இடங்களில் நோய் பதிவாகி வருகிறது. இதன் காரணமாகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
நாங்கள் பரிசோதித்த 48 பண்ணைகளிலும் இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்ணைகளில் சுமார் 1,200 பன்றிகளை பரிசோதித்ததில், பெரும்பாலான விலங்குகளுக்கு நோய்க்காரணி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், சுமார் 200 பன்றிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. இது மனிதர்களுக்கு பரவும் விலங்கு நோய் அல்ல என்பதால், இறைச்சியை உட்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதேநேரம், சிறிய அளவிலான பன்றி வளர்ப்பாளர்கள் வீடுகளிலேயே பன்றிகளை அறுத்து, அதன் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் இந்நோய் மிக வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுகளை அகற்றும் போது சரியான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பண்ணையாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106