கொழும்பில் நடைபெற்ற இலங்கை– இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் மூன்றாவது பொதுக்கூட்டம்!

Friday, October 30th, 2026

இலங்கை–இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் (SLIMFA) மூன்றாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, சங்கத்தின் தலைவராக நிஸ்தார் காசிம் மீண்டும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும், சங்கத்தின் ஆலோசகருமான சந்தோஷ் ஜா கலந்துகொண்ட இக்கூட்டத்தில், எதிர்வரும் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஊடகத் துறையினரின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இச்சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார்.

2024 மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், குறுகிய காலத்திற்குள் ஊடகத் திருவிழா, செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சிப் பட்டறை, ஆசிரியர்களுக்கான வட்டமேசைக் கலந்துரையாடல்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான களப் பயண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கை ஊடகவியலாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தின் நோக்கம், இரு நாடுகளினதும் ஊடகத் துறையினருக்கு இடையிலான தொழில்சார் உறவுகளை வலுப்படுத்துவதுடன், இரு நாட்டு மக்களிடையேயான நட்புறவையும் மேலும் மேம்படுத்துவதாகும்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106