உலகை அச்சுறுத்தும் சூப்பர் எல் நினோ!

Friday, October 30th, 2026

உலகளாவிய ரீதியில் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், ‘சூப்பர் எல் நீனோ’ தாக்கத்தினால் உலகளவில் சுமார் 3.73 இலட்சம் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எல் நினோ வெப்ப இறப்பு கண்காணிப்புக் கருவி  கணித்துள்ளது.

இந்த கணிப்புகளின் படி, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிகபட்சமாக சுமார் 56,000 உயிரிழப்புகள் பதிவாகக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஆசிய பிராந்தியத்தில் பெரும் பாதிப்பாக, இந்தியாவில் சுமார் 55,000 உயிரிழப்புகள் நிகழக்கூடிய ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வரிசையில் இந்தோனேசியாவில் சுமார் 29,000 உயிரிழப்புகளும், பிரேசிலில் சுமார் 19,000 உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகரித்து வரும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர பாதிப்புகள் மனித ஆரோக்கியத்திலும் உயிர் வாழ்விலும் எந்தளவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106