ஈ.பி.டி.பி.யின் வேலைத்திட்டங்கள் மக்கள் நலன் சார்ந்தே தீர்மானிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Thursday, October 29th, 2026
…..
உள்ளூராட்சி மன்றங்களின் வேலைத்திட்டங்களும், சபைகளில் முன்வைக்கப்படும் பிரேரணைகளும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (29.10.2026) நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வேலணைப் பிரதேச சபையில் கட்சிக்கு இம்முறை துரதிஸ்டவசமாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மூன்று பிரதிநிதிகள் கிடைத்துள்ள நிலையில், பிரதேசத்தின் அனைத்து வட்டார மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சபையில் முன்வைக்கப்படும் பிரேரணைகள் தொடர்பில் பிரதேச ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
குறித்த கூட்டத்தில் கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளர் போல் – சின்னையா சிவராசா, மேலதிக அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான அனுஷியா ஜெயகாந்த்
உள்ளிட்டோருடன் பிரதேசக் கட்சி செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், சிரேஸ்ட உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன், முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106