வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகள் பங்களிக்க வேண்டும் – ஆளுநர் வேதநாயகன்!
Thursday, October 29th, 2026
……
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 121 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று (28) புதன்கிழமை வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் விவசாய உள்ளீடுகளையும் உபகரணங்களையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் விவசாயிகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் விவசாயமும் கடற்றொழிலும் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்த ஆளுநர், நெற்செய்கைக்கு அப்பால் ஏனைய பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடுவதன் மூலம் விவசாயிகள் தமது வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தி உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதுடன், உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும்போது சந்தை விலைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பயிர்ச்செய்கைக் காலங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி தொடர்பான தகவல்களை அரசாங்கம் திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில், அறுவடைக் காலங்களில் தொடர்புடைய விவசாயப் பொருட்களின் இறக்குமதி வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் விவசாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாகத் தீர்க்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 121 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக இன்று 250 விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106