யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையம் நாளை முதல் இயங்கும்!

Monday, October 26th, 2026


யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாகப் பேருந்துச் சேவைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையம், நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லாமல் காணப்பட்டது.

இதனைச் செயற்படுத்துவதற்காகக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில், பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தற்போது நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக, இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாளை முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்குச் செல்லும் நெடுந்தூரப் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் என அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106