பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி!
Monday, October 26th, 2026
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்புத் தொடரின் 4 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி வெறும் 19 ஓட்டங்களை எட்டுவதற்குள் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அணியைச் சரிவிலிருந்து மீட்ட பென் டக்கெட் பொறுப்புடன் ஆடி அபார சதம் விளாசினார்.
அவர் 111 பந்துகளில் 105 ஓட்டங்கள் (10 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள்) குவித்து அணியை சற்று பலப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக இணைப்பாட்டத்தில் ஆடிய சேம் கரன் 42 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய ஷாஹின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும், ரசாவுல்லா 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவூப் மற்றும் அரபாத் மின்ஹாஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 242 என்ற வெற்றி இலக்கை அடைய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து அதிரடியாக வெற்றி இலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஷதாப் கான் சதம் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தி சென்றார்.அவர் 96 பந்துகளில் 113 ஓட்டங்கள் (13 நான்கு ஓட்டங்கள் , 5 ஆறு ஓட்டங்கள்) பெற்றார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஜெமி ஓவர்டன் மூன்று விக்கெட்டுகளையும், லியம் டவ்சன் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிகண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106