பவன் ரத்நாயக்கவின் திறமைக்கு குறித்து அஸ்வின் !
Monday, October 26th, 2026
இலங்கை கிரிக்கெட் வீரர் பவன் ரத்நாயக்கவின் துடுப்பாட்டத் திறமையைப் பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அவருக்கு இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படாமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 106 பந்துகளில் 130 ஓட்டங்களைக் குவித்த பவன் ரத்நாயக்க, இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட இரண்டாவது அதிகூடிய இலக்காக இது பதிவானது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் பவன் ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டார்.
அவரது துடுப்பாட்ட நுட்பம், சிறந்த துடுப்பாட்டத் தெரிவுகள் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறன் ஆகியவற்றை அஸ்வின் பாராட்டியுள்ளார்.
மேலும், 64 முதல்தரப் போட்டிகளில் விளையாடி, சுமார் 50 ஓட்டங்கள் என்ற சராசரியுடன் 4,200க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ள பவன் ரத்நாயக்கவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்றும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் வளர்ந்துவரும் துடுப்பாட்ட வீரர்களின் திறமைகள் நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிட்ட அஸ்வின், திறமையான வீரர்கள் சர்வதேச மட்டத்தில் தங்களது திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106