டிசம்பரில் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை எடுக்கும் தோனி!
Monday, October 26th, 2026
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் அணித்தலைவரான மகேந்திர சிங் தோனி, தனது ஐபிஎல் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், தனது உடல் தகுதி மற்றும் ஓய்வு குறித்தான நிலைப்பாட்டைப் பகிர்ந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
“நான் சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மருத்துவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையிலும், அடுத்த ஒரு பருவங்களில் முழுமையாக விளையாடும் அளவிற்கு எனது உடல் ஒத்துழைக்கிறதா என்பதைப் பார்த்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவெடுப்பேன்.”என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது உடலை ஒரு “பழைய வின்டேஜ் வாகனம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடுவது மருத்துவர்களின் கைகளில் தான் உள்ளதாகவும் தெரிவித்தார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106