நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கு நாளை விஜயம் செய்கிறார் யாழ் மறைமாவட்ட ஆயர்!
Saturday, October 24th, 2026
……
நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான விஜயத்தை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை நாளை (25) மேற்கொள்ளவுள்ளார்.
நெடுந்தீவுப் பங்குத்தந்தை அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளாரின் தலைமையில் இவ்விஜயத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாளை (25.10.2026) காலை 8.00 மணிக்கு கடற்படையின் விரைவுப் படகு மூலம் நெடுந்தீவு துறைமுகத்தை வந்தடையும் ஆயர் ஆண்டகைக்கு, அருட்பணிச்சபையினரால் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, பிரதேச செயலக முன்றலிலிருந்து பங்குப் பணிமனை வரையிலான வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்து இறைவேண்டலில் ஈடுபடவுள்ள ஆயர் ஆண்டகை, பங்கின் 108 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தையும் வழங்கி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கவுள்ளார்.
திருப்பலியைத் தொடர்ந்து, நீண்டகால வரலாற்றைக் கொண்டதும் தற்போது புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான நெடுந்தீவுப் பங்குப் பணிமனையை ஆயர் ஆண்டகை ஆசீர்வதித்துத் திறந்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்குச் சொந்தமான அனைத்து ஆலயங்களையும் அவர் தரிசிக்கவுள்ளார்.
ஆயர் ஆண்டகையின் இவ்விஜயம் நெடுந்தீவுப் பங்கின் ஆன்மிக வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106