போராடும் மக்களின் ஒரு துண்டு நிலம்கூட விடுவிக்கப்படவில்லை – ஸ்ரீகாந்த் ஆதங்கம்!

Friday, October 23rd, 2026


வலிகாமம் வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராடுகின்ற மக்களின் ஒரு துண்டு நிலம்கூட விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், பல வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட காங்சேன்துறை வீதியில் இராணுவ வாகன பராமரிப்பு நிலையம் இருந்த காணியே தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், தென்னிலங்கையில் தற்துணிவுடன் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கொட்டும் மழையிலும் போராடி வருக்கின்ற மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் தற்துணிவுடன் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி மக்களினால் இன்று 27 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு இந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகின்ற போதிலும் கடந்து இரண்டு வருடங்களாக மக்களின் காணிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையில் கடந்த வாரம் சுமார் 11 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் சுமார் 2570 ஏக்கர் காணிகள் அரசாங்க படையினரின் கட்டுபாட்டில் இருக்கின்ற நிலையில் வெறுமனே 11 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டிருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.

குறிப்பாக, தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்ற வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 2035 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் அரச படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வெறும் 1.69 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுவும் காணிக்காக போராடுகின்ற மக்களின் காணி அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை வீதியை அண்மித்த பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், படையினரின் வாகன பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையினால் விடுவிக்கப்படாமல் இருந்த காணியே தற்போது விடுக்கப்பட்டிருக்கின்றது

இது போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.

எனவே, காணிக்காக ஏங்கியவாறு போராடுகின்ற மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விநயமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106