சீனாவில் 7.0 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் – 16 பேர் உயிரிழப்பு!

Friday, October 23rd, 2026

சீனாவின் திபெத் பிராந்தியத்தில் 7.0 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த (22) இரவு 10.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், நாக்சு நகருக்கு வடகிழக்கே சுமார் 191 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது 339 வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வீடுகளை இழந்த மக்களுக்குத் தற்காலிக தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மொத்த சேதங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106