இலங்கை அணி வரலாற்று வெற்றி!
Friday, October 23rd, 2026
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச முக்கோணத் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
430 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணி, 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
இலங்கை அணியின் வெற்றிக்கு பவன் ரத்நாயக்க 130 ஓட்டங்களைப் பெற்று முக்கிய பங்களிப்பை வழங்கினார். தசுன் ஷானக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தலா 97 ஓட்டங்களைப் பெற்றனர். ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
முன்னதாக, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் தலைவர் ஹாரி புரூக் 116 பந்துகளில் 202 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் மூலம், ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டைச் சதம் பெற்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், அதிவேகமாக இரட்டைச் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்தார்.
எனினும், ஹாரி புரூக்கின் சாதனைமிக்க துடுப்பாட்டத்துக்குப் பின்னரும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஷ் டங் 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் 103 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 430 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்த இலங்கை அணி, கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106