சாரதி அனுமதி பத்திரம் இல்லாதவர்களுக்கு வாகனம் கொடுத்தால்சிறை தண்டனை –  உரிமையாளருக்கு பொலிசார் எச்சரிக்கை!

Wednesday, October 21st, 2026


…..
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்ல சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு தமது வாகனங்களை கொடுக்கக்கூடிய வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த குற்றத்திற்கு உட்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருபத்தையாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படுவதற்குரிய வாய்ப்பு இருப்பதோடு சிறை தண்டனையும் வழங்குவதற்குரிய வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சட்டம் ஆரம்பத்திலிருந்தே அமுலில் இருந்தாலும் இனிவரும் காலங்களில் பாரபட்சம் இன்றி இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகவும் பொலுசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து சர்வதேச வாகன அனுமதிப்பத்திரமோ அல்லது வாகன அனுமதிப்பத்திரமோ இல்லாமல் வாகனங்களை செலுத்தக்கூடிய சம்பவங்கள் அதிகமாகவே பதிவாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி அனுமமதிப் பத்திரம் பெறாத ளைஞர்கள் இவ்வாறு நண்பர்கள் உறவினர்களின் வாகனங்களை எடுத்துச் சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவம் பவரலாக இடம்பெற்று வருவதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கக்கட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106