நெடுந்தீீவுக் கடலில் விடப்பட்ட மாதிரிப் படகால் தமிழகத்தில்இராமநாதபுரத்தில்  பரபரப்பு!

Tuesday, October 20th, 2026


…
நெடுந்தீவில் மரணித்த ஒருவரின் நினைவாகக் கடலில் விடப்பட்டதாகக் கூறப்படும் மரத்தினாலான சிறிய ரக மாதிரிப் படகொன்று தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் கரையொதுங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் குறித்த படகு கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய படகில், 13ஆம் வட்டாரம் நெடுந்தீவு பவள ரதம் எனத் தமிழில் எழுதப்பட்டிருந்ததுடன், ஆங்கிலத்தில் “WARD No.13 DELFT EAST SRI LANKA” எனவும் பொறிக்கப்பட்டிருந்தது.

படகில் எவரும் இருக்கவில்லை என்பதுடன், அதில் எந்தவொரு பொருளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் படகு தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நெடுந்தீவில் மரணித்த ஒருவரின் நினைவாகவே குறித்த மாதிரிப் படகு கடலில் விடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேநேரம் நெடுந்தீவில் இருந்து கடலில் விடப்பட்ட இந்த மாதிரிப் படகு, கடல் நீரோட்டத்தின் காரணமாக தமிழகக் கரையைச் சென்றடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106