நெடுந்தீவு மகாவித்தியாலய முகப்பு நுழைவாயிலுக்கான கட்டுமாணம் ஆரம்பம்!……..
Tuesday, October 20th, 2026
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் அமுத விழாவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்படவுள்ள முகப்பு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (20.10.2026) சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நெடுந்தீவுக் கிளைத் தலைவர் எ. அருந்தசீலன் வழங்கிய முதல் அடிக்கல்லை, பாடசாலை அதிபர் ஜயாத்துரை தயாபரன் பெற்றுக்கொண்டு சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்தார்.
தொடர்ந்து, அருட்தந்தை சோபன் ரூபதாஸ் அடிகளார், பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ், நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நெடுந்தீவுக் கிளைக்குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நிதியுதவியுடன், அதன் நெடுந்தீவுக் கிளையினரால் முன்னெடுக்கப்படும் இக்கட்டுமானப் பணிகள், நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன.
பாடசாலையின் அமுத விழாவை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், பாடசாலையின் அடையாளத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106