சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வன்முறையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை – பிரான்ஸ் அதிபர்!

Tuesday, October 20th, 2026

நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது கடைகளைச் சூறையாடிய மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வன்முறையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

மக்ரோனின் கடும் கண்டனம்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெடித்த வன்முறைகள் மற்றும் சூறையாடல் சம்பவங்கள் குறித்துத் தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையைக் விடுத்தார்.

“வன்முறையில் ஈடுபட்டுப் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் அதற்கான விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்; சூறையாடியவர்கள் கொள்ளையடித்த பொருட்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என மக்ரோன் தெரிவித்தார்.

“நம் நாட்டின் குடியரசு அமைப்பைக் குலைக்க முயன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள். வன்முறையில் ஈடுபட்ட எவரும் தப்பிக்க முடியாது”.

ஆர்ப்பாட்டங்களின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த வன்முறைகள் குறித்துத் நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது அரசு எந்தவித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்தார்.

வன்முறைகளும் கைது நடவடிக்கைகளும்பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டும், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் வருகின்றன.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106