பதற்றமான சூழ்நிலையைக் குறைக்க ஈரான் –  பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

Tuesday, October 20th, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் குறைப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வீரா  ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய வெளியுறவு அமைச்சரின் டெலிகிராம் பக்கத்தின் தகவலின்படி, இந்தக் கலந்துரையாடலின் போது மத்திய கிழக்கில் “பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை” உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தெஹ்ரானில் ராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவும் , பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் கடந்த நாட்களில் தெஹ்ரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

போரை மீண்டும் தொடங்குவது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அமெரிக்காவிற்கு ஈரானின் தலைமையும், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உயர் அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106