வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது – பிரான்ஸ் ஜனாதிபதி!
Monday, October 19th, 2026
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நாடு தழுவிய வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த இரவு (அக்டோபர் 18, 2026) நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக அவசர உரை ஒன்றை ஆற்றினார்.
ஜனாதிபதியின் உரையின் முக்கிய அம்சங்களாக –
நேற்றைய வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய மேக்ரான், “இன்று இரவு நாம் அனைவரும் கோபத்தையும் அவமானத்தையும் உணர்கிறோம்” என்று கூறினார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராடுபவர்களுக்கும், பொதுச் சொத்துக்களை உடைத்து, சூறையாடி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த வன்முறைகளை எதனைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்றார்.
வன்முறையில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
இன்னும் ஆறு மாதங்களில் பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டின் அவசரத் தேவை வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபடுவது அல்ல என்றும், அது ஜனநாயக விவாதங்களைச் சீர்குலைக்கும் முயற்சி என்றும் அவர் எச்சரித்தார்.
அமைதியான முறையில் விவாதங்களை முன்னெடுக்குமாறு அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106