ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான வீதியின் சீரமைப்பு தாமதம் – பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு!

Friday, October 16th, 2026


…….
ஊர்காவற்றுறை செருக்கன் சந்தியிலிருந்து செல்லப்பா கடை வரையிலான 780 பிரதான வீதியின் ஒரு பகுதி இதுவரை முழுமையாகச் சீரமைக்கப்படாமையால், அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த வீதியை விரைவாகப் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அன்றைய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பரிந்துரைக்கு அமைய, தீவகப் பகுதிகளிலுள்ள பல வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

அந்த வகையில், வேலணை வங்களாவடி சந்தியூடாக புளியங்கூடல் சந்தியிலிருந்து ஊர்காவற்றுறைக்குச் செல்லும் 780 பிரதான வீதியின் பெரும்பகுதியும் செப்பனிடப்பட்டது.

கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்திப் பணிகளின்போது, வீதியின் அகலிப்பு மற்றும் அடித்தள அமைப்புப் பணிகள் உள்ளிட்ட பெரும்பாலான வேலைகள் நிறைவுசெய்யப்பட்டன.

எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், வீதியின் ஒரு சிறிய பகுதியை முழுமையாகப் புனரமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

வேலணை மற்றும் ஊர்காவற்றுறைப் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் 780 பிரதான வீதி, இரு பகுதிகளுக்கும் இடையிலான சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட பயணத்தை இலகுபடுத்துகின்றது.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த வீதியின் 2 கிலோமீற்றர் வரையான தூரம் கொண்ட பகுதி சீரமைக்கப்படாமல் காணப்படுவது, நாளாந்தம் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள், பாடசாலை மாணவர்கள், வங்கிச் சேவைகளைப் பெறச் செல்லும் பொதுமக்கள், அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள், நாளாந்த கூலித் தொழிலுக்காகப் பயணிப்போர் எனப் பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

குறித்த வீதியைச் சீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் தற்போதைய ஆட்சியாளர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், வீதியின் அடித்தளப் பணிகள் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள பகுதிக்கு காப்பெற் இட்டு வீதியை முழுமையாகச் சீரமைக்க முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மக்களின் நாளாந்தப் போக்குவரத்துத் தேவைகள், நோயாளர்களின் அவசரப் பயணங்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, 780 பிரதான வீதியின் எஞ்சியுள்ள பகுதியையும் விரைவாகப் புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106