யாழ்ப்பாண மாவட்டத்தில் 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!……

Friday, October 16th, 2026


யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (17.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் மேஜர் B.H.D.S. கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106