தேசிய சாதனையாளர்களை கௌரவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி!
Tuesday, October 13th, 2026
…..
தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், வரவேற்பு ஊர்வலமும் இன்று (12) சிறப்பாக நடைபெற்றன.
இலங்கை தேசிய மட்டத் தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் முதலாம் இடத்தையும், உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்ட உற்பத்தித் திறன் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் அயராது உழைத்த கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்பதாக, மருதனார்மடம் சந்தியிலிருந்து மேற்கத்தேய வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான வரவேற்பு ஊர்வலம், கே.கே.எஸ். வீதி வழியாகச் சென்று கல்லூரி மண்டபத்தைச் சென்றடைந்தது.
கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பி. ஜெயகரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய மட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களின் சாதனைகள் இதன்போது பாராட்டப்பட்டதுடன், அவர்களின் வெற்றிக்குப் பங்களித்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106