வேலணையில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மயானங்களின் சீரமைப்புப் பணிகள்!

Tuesday, October 13th, 2026


…….
வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட 12 வட்டாரங்களிலும் அமைந்துள்ள மயானங்களின் சீரமைப்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த மயானங்களில் பெரும்பாலானவற்றில் அமைந்திருந்த கொட்டகைகள் நீண்டகாலமாகச் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன.

இதனால், மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலங்களை எரியூட்டுவதிலும், இறுதி அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுப்பதிலும் மக்கள் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு மயானங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், இறந்த உறவுகளுக்கான இறுதி யாத்திரையின்போது வாழும் உறவுகள்  எதிர்கொண்டுவந்த இடர்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன்,  மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மயானங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இப்பணிகளுக்காக வேலணைப் பிரதேச சபைக்கும் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106