தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சி – டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!…….
Tuesday, October 13th, 2026
தமிழ் மக்ககின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்ற தமிழ் அரசியல்வாதிகள், தமது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டி தப்பிக்க முயல்வதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அன்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
.
அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டும் தமிழ் அரசியல்வாதிகள், தமது பொறுப்புகளில் இருந்து விலக முயற்சிக்கின்றனர்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உரியது. அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவதால் மட்டும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்றும் கூறினார்.
மேலும் தாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலங்களில், அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும், பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் விலகவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106