ஊர்காவற்றுறை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஈ.பி.டி.பி ஆராய்வு!……

Monday, October 12th, 2026


ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் குறித்த பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிசார் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அப்பகுதி மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்தனர்.

இதன்போது, ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனடிப்படையில் இவ்விடயம் குறித்து துறைசார் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை, ஊர்காவற்றுறை பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல், உள்ளக வீதிகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பிரதேசத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவது தொடர்பிலும் கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் பாதுகாப்பையும் சமூக அமைதியையும் உறுதிப்படுத்துவதற்கும் உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்த்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில்  கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், ஊர்காவற்றுறை பிரதேச அமைப்பாளர் மருதயினார் ஜெயகாந்தன், கட்சியின் முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன் ,  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள்,  தோழர்களும் கலந்துகொண்டிருந்தனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106