நெடுந்தீவில் தேவா கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற  சிறுவர் தின நிகழ்வு!

Saturday, October 10th, 2026


…..
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) அனுசரணையுடன் நெடுந்தீவு நெடுங்கதிர் கொத்தணி மட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு இன்று (10.10) நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

JSAC நிறுவனத்தின் நெடுந்தீவு பிரிவின் உதவி நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருமதி ஜீ. விக்ரறின் மெலோஜனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பங்குத்தந்தை அருட்பணி டிலான் யூலியஸ் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நெடுந்தீவில் இயங்கி வரும் 19 சுய உதவிக் குழுக்களில் 10 சுய உதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாக செயற்பட்டு வரும் நெடுங்கதிர் கொத்தணி மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 216 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106