வெளிநாட்டுப் பல்கலை மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – கணினி அவசர தயார்நிலை பிரிவு!
Saturday, October 10th, 2026
…….
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இவ்வாறான மோசடிகளில் சிக்கி இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுத் தருவதாகவும், அதன் மூலம் வெளிநாட்டு விசா அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சில ஆண்டுகளுக்கான வேலை அனுமதியைப் பெற்றுக்கொள்வதுடன், பின்னர் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி சில விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விளம்பரங்களில் சில முற்றிலும் மோசடியானவை என எச்சரித்துள்ள இலங்கை கணினி அவசர தயார்நிலைப் பிரிவு, பொதுமக்கள் இவற்றை நம்பி பணத்தை இழப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106