இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டி – 4 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் வெற்றி!
Saturday, October 10th, 2026
…..
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைச் பெற்றுகொண்டது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டவீரர் லஹிரு உதார சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 பந்துகளில் 91 ஓட்டங்களைக் குவித்தார்.
இவருடன் இணைந்து கமிந்து மெண்டிஸ் 18 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் இம்ரான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப்பெற்று வெற்றியைக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி சார்பில் சஹீ்ப்சடா பர்ஹான் அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு தரப்பில் எசான் மலிங்க 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106