அரச வங்கியில் 13 கோடி நிதி மோசடி – வங்கி அதிகாரிக்கு 35 வருட சிறை!
Saturday, October 10th, 2026
….
அரச வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 13 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தி, குற்றவியல் ரீதியான முறைகேடான கையாடல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வங்கி அதிகாரி ஒருவருக்கு 35 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை 15 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, குறித்த அதிகாரி முறைகேடாகக் கையாடிய 135,102,975 ரூபாயை நட்டஈடாக சம்பந்தப்பட்ட அரச வங்கிக்குச் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடுவலை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் பிரதம காசாளராகப் பணியாற்றிய அதிகாரிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106