சமுதாயத்தை அழித்தாயினும் வருமானத்தை அதிகரிப்பதற்காக பார்பொமிற் பயன்படுத்தப்படுகின்றது – ஈ பி.டி.பி. ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு
Friday, October 9th, 2026
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பார்பெமிற்களை அநுர அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று சாடியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்,
எமது சமூகத்தின் எதிர்காலத்தினையும், எமது கட்டமைப்புக்களின் விழுமியங்களையும் பாதிக்கச் செய்யும் இழிவான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது எள்றும் வலியுறுத்தியுள்ளார்
வலி வடக்கு பிரதேச செயலக பிரிவில் மதுபானசாைலை ஒன்றை அமைப்பதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்தி சமூக அபை்புக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்த்தில் பங்குபற்றி கருத்துரைக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும்,
“சுற்றுலாத்துறையினை வளர்த்து எடுப்பதற்கான ஏற்பாடாக 2023/2024 காலகட்டத்தில் ஏராளமான மதுபான சாலைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
அன்றைய காத்தில் அப்போதைய அரச்ங்கத்தினை ஆதரிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக குறித்த பார்பெமிற்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் எமது சமூகம் போதைக்கு அடிமையாகி சீரழிக்கப்படுவதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பார்பொமிற்றுக்கள் இரத்து செய்யப்படும் என்பதுடன் இலஞ்சமாக பார்பொமிற் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள் எனவும் தற்போதைய ஆட்சியாளர்களினால் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இரத்து செய்யப்படும் என்ற பார்பொமிற்றுக்கள் தற்போது அரசாங்கத்தின் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. வருமானத்தை. அதிகரித்து தமது அரசாங்க சாதனையாக காட்டிக் கொள்வதற்கே பார்பொமிற் பயன்படுத்தப்படுகின்றது.
அதாவது போதைப் பாவனையால் எமது சமூகம் சீரழிகின்றது, எமது விழுமியங்கள் நாசமாக்கப்படுகின்றன என்பது தெளிவாக தெரிந்திருந்தும் இந்த அரசாங்கம் குறுகிய நலன்களுக்காக இதனை செயற்படுத்துகின்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது மக்கள் போூதக்கு அடிமையாகி நாசமாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதற்க்கவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மக்களின் நியாயமான கோரிக்கையை இந்த அரசாங்கம் சார்பில் எமது பிரதேசத்தில் இருக்கின்றவர்கள் புரிந்து கொள்ன வேண்டும்.
அடுத்த முறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டு எமது பிரதேசத்தில் மதுபான சாலைகள் அமைக்க கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோன்று ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிரந்தர தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
எமது இந்தப் போராட்டம் மக்களிை்ன் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, இந்த விவகாரம் தொடர்பான அண்மைய நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதோ, அல்லது அந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாமல் இடையூறு ஏற்படுதனதுவதை நோக்கமாக கொணடதோ அல்ல” என்று தெரிவித்தார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106