உந்துருளிகளுக்கான பதிவுகள் ஆரம்பம்!

Friday, October 9th, 2026


….
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஐந்து மாவட்டங்களில் புதிய உந்துருளிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேவையான ஆரம்பகட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகங்களில் புதிய உந்துருளி பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக உந்துருளி பதிவுகள் மாத்திரமே இந்த முறையின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பின்னர் அனைத்து மோட்டார் வாகனங்களின் பதிவுகளையும் இந்த நடைமுறையின் கீழ் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106