புங்குடுதீவு வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 100 யூரோ சிறுவர் சேமிப்பு !

Friday, October 9th, 2026


….

புங்குடுதீவு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பொதுமக்களின் நலன்களை கருத்திற்கொண்டும், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் துரித அபிவிருத்தியை நோக்கமாக கொண்டும் புங்குடுதீவு உலகமையம் தன்னார்வ தொண்டு நிறுவனமும், நோயாளர் நலன்புரி சங்கமும் இணைந்து சிறப்பான திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அமைந்துள்ள மகப்பேற்று விடுதியில் பிறக்கப்போகின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 100 யூரோ பணத்தொகையினை சிறுவர் சேமிப்பு வங்கிக்கணக்கு ஊடாக வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

புங்குடுதீவைச் சேர்ந்த கே.நாகரட்ணம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவாக அவரது புதல்வர் நாகரட்ணம் நந்தகுமார் புங்குடுதீவு வைத்தியசாலையில் ஏற்கனவே பிறந்த இரு குழந்தைகளுக்கு தலா 100 யூரோ நிதியுதவி வழங்கிவைத்தார்

எதிர்வரும் காலங்களிலும் குறித்த வைத்தியசாலையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 100 யூரோ நிதியுதவியை புங்குடுதீவு உலகமையம் ஊடாக வழங்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106