திருமலைத் தோழன் அன்புவின் மறைவுக்கு செயலாளர் நாயகம் அனுதாபம்!
Wednesday, October 7th, 2026
….
திருஞானசுந்தரம் புனிதன் என்கின்ற இயற்பெயரைக் கொண்ட தோழர் அன்பு எங்களையும் தான் நேசித்த மக்களையும் பிரிந்து சென்றுவிட்டார்.
அவர் பிரிந்து சென்று ஒரு மாதம் கடந்து சென்றுள்ள நிலையிலும் அவர் ஆற்றிய ஆழமான பணிகளும், அவர் கண்ட கனவுகளும் எனது மனதில் நினைவுகளாக புதைந்து கிடக்கின்றன.
ஈழப் போராட்டம் பற்றிய சிந்தனை தமிழர் தேசமெங்கும் வீரியமாக பரவிய 80 களில்…
திருமலை மண்ணில் இருந்து எரிமலையாக மக்களின் விடுதலைக்கான கனவுகளோடு ஈ.பி.ஆர்.எல்எப். அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் அன்பு.
காலவோட்டத்தில்,. என்னால் முன்வைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான – மாற்றுக் கருத்துக்களின் நியாயத்தினை புரிந்து கொண்டு ஈ.பி.டி.பி. இல் இணைந்து இறுதி வரையில் உழைத்த தோழர் அன்பு இறுதி மூச்சை நிறுத்தி ஒரு மாதம் கடந்திருக்கிறது.
இவ்வாறான தோழர்களின் இழப்புக்கள், எமது பயணத்தின் மீது உத்வேகத்தினை ஏற்படுத்துகின்றது. என்னை நம்பியவர்களின் இலக்கினை அடையாமல் ஓய்ந்துவிடக்கூடாது என்ற ஓர்மத்தை ஏற்படுத்துகின்றது.
தோழர் அன்புவின் பிரிவினால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர், உறவினர், தோழர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106